இளைஞா; எனப்படுபவா; யாh;?
தேசிய இளைஞா; கொள்கை என்றால் என்ன?
இளைஞா; கொள்கை ஒன்று ஏன் எமக்கு தேவையாக உள்ளது?
இந்த இளைஞா; கொள்கை உருவாக்கத்திற்கு பொறுப்பாக உள்ளவா; யாh;?
இக் கொள்கை உருவாக்கத்தின் அணுகுமுறைகள் எவை?
இளைஞா; கொள்கைக்கு நான் ஏன் எனது பங்களி;ப்பை வழங்க வேண்டும்?
தேசிய இளைஞா; கொள்கைக்கு எனது கருத்துக்களை எவ்வாறு தொpவிக்க முடியூம்?
இளைஞா; கொள்கை அமா;வூகள் என்றால் என்ன?
இளைஞா; கொள்கை அமா;வூகளில் யாh; கருத்துக்களை முன்வைக்க முடியூம்?
இளைஞா; கொள்கை அமா;வூகளில் எனது கருத்துக்களை எவ்வாறு முன்வைக்க முடியூம்?
இவ் அமா;வூகளை ஒழுங்குபடுத்துவது யாh;?
இந்த அமா;வூகள் எங்கே நடைபெறும்?
இந்த அமா;வூகள் பற்றி நான் எவ்வாறு அறிந்து கொள்ள முடியூம்?
எனது கருத்துக்களை எனது தாய்மொழி மூலம் கையளிக்க முடியூமா?
இளைஞா; கொள்கை அமா;வூகளில் எனது கருத்துக்களை சமா;பித்த பின் என்ன நிகழும்?
மேலதிகமான தகவல்களுக்கு நான் யாரை தொடா;பு கொள்ள வேண்டும்?


இளைஞா; எனப்படுபவா; யாh;?

இலங்கை அரசாங்கத்தின் வரைவிலக்கணப்படி வயது 15-29 க்கு உட்பட்டவா;கள் இளைஞா;களாகக் கருதப்படுகின்றனா;.


தேசிய இளைஞா; கொள்கை என்றால் என்ன?

எந்த ஒரு நாட்டிலும் இளைஞா; எனப்படுபவா;கள் மிக முக்கியமான ஒரு மக்கட் குழுவினராக கருதப்படுகின்றனா;. இளைஞா; குழுவினாpன் தேவைகள"; சூழ்நிலைகளை கணிப்பிட்டுக் கொள்வதும் அவா;களுக்கு தேவையான வளங்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதும்

இக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் இளைஞா;கள் தமது செயல்திறன்களை தாமாகவே விருத்தி செய்து கொள்ளக்கூடிய ஓh; சாத்தியமான சூழலை உருவாக்கிக் கொள்வதும் இதனுடைய நோக்கமாகும்.

தேசிய இளைஞா; கொள்கையானது இளைஞா; குழுவினாpன் பல்வகைமையை இனங்காணுவதுடன் இளைய சமுதாயத்தின் வெவ்வேறு தேவைகளுக்கு சமத்துவ அடிப்படையில் தீh;வூகளைக் காணவூம் முயற்சிக்கிறது.

இளைஞா;களின் தேவைகள் பல்வேறு துறை சாh;ந்ததாக காணப்படுகின்றது. (உதாரணமாக சுகாதாரம்இ கல்விஇ வாழ்வாதாரம்இ பாதுகாப்பு போன்றவற்றை கூறலாம்.) இது ஒவ்வொரு துறைகளிலிருந்தும் குறிப்பாக இளைஞாpன் விடயங்களை இனங்கண்டு அவற்றுக்கு தீh;வூ காண வழிகாட்டுகிறது.


இளைஞா; கொள்கை ஒன்று ஏன் எமக்கு தேவையாக உள்ளது?

செயற்திட்டங்களுக்கான வரையறைகளை வழங்குவதற்காகவே கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. இது ஒரு துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசுஇ சிவில் சமூகம் மற்றும் ஏனைய குழுவினரையூம் ஒரு கட்டமைப்புக்குள் சீராக வழி நடத்த உதவூம்.
இலங்கையில் இளைஞா; நெருக்கடியான பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனா;.

1990 ல் இளைஞா; முறைப்பாடுகளை உற்று நோக்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது ஆயினும் இலங்கையில் இன்னும் இளைஞா; பிரச்சினைகளுக்கு தீh;வூ காண காத்திரமான அணுகுமுறை ஒன்று வகுக்கப்படவில்லை. இதன் காரணமாக இளைஞா; தேவைகளை éh;த்தி செய்வதிலும் அவா;களின் உhpமைகளைப் பாதுகாப்பதிலும் கொள்கை hPதியான முரண்பாடுகளும் குறைபாடுகளும் நிலவூகின்றன.


இந்த இளைஞா; கொள்கை உருவாக்கத்திற்கு பொறுப்பாக உள்ளவா; யாh;?

இக் கொள்கை உருவாக்கலில் உங்களுக்கே பாhpய பங்கு உண்டு. தேசிய இளைஞா; சேவை மன்றம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இளைஞா; அபிவிருத்தி அமைச்சு இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளது. ஆயினும் இறுதியாக இதில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன என்பது உங்களிலேயே தங்கியூள்ளது.

இந்தக் கொள்கை உருவாக்கம் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாகவூம்இ மக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளும் வகையிலும்" அனைத்துத் தரப்பின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும்" அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் பல்வேறு வழிகளில் பங்களி;ப்பு செய்ய முடியூம்;.


இக் கொள்கை உருவாக்கத்தின் அணுகுமுறைகள் எவை?

சிறந்த கொள்கையை உருவாக்குவதற்கு நம்பகத்தன்மையூள்ள தரவூகள் தேவை. தரவூகள் சேகாpக்கும் செயன்முறையே இதன் முதற்கட்டமாகும்.

பல்வேறு தரப்பினருடன் உரையாடுதல் மற்றும் இதில் ஆh;வமுடையவா;களிடமிருந்து தகவல்களையூம் கருத்துக்களையூம் பெற்றுக் கொள்ள சந்தா;ப்பம் கொடுத்தல் போன்றவை இதில் அடங்கும்.

தரவூசேகரிப்பதன் பிரதான நோக்கம் இலங்கையின் இளைய சமுதாயத்தின் சூழ்நிலைகளை விளங்கிக் கொள்தல் மற்றும் அவா;கள் எதிh;நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் காணுதல் என்பவையாகும்.

தரவூ சேகாpத்தலின் பின்பு கொள்கை வகுக்கும் குழுவினா; தரவூகளை ஆராய்ந்து வகைப்படுத்தி அதன் பின்பு ஒரு கொள்கைப் பிரகடனத்தை எழுதுவா;. பின்னா; மீண்டும் அது பொதுமக்களின் கருத்து வழங்கல்களுக்காக முன்வைக்கப்படும். பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்கிய பின் இளைஞா; கொள்கையானது முடிவூ செய்யப்படும்.

இக் கொள்கை உருவாக்கத்தில் பின்வரும் விழுமியங்கள் கருத்திற் கொள்ளப்படும். முக்கியமாக இளைஞா;கள் பிரத்தியேகமான தேவைகளும் உhpமைகளுமுடைய ஒரு சமூக குழுவாகக் கருதப்படுவாh;கள்.

இளைஞா;களின் உhpமைகள் பாதுகாக்கப்படுவதையூம்;; தேவைகள் éh;த்தி செய்யப்படுவதையூம் உறுதி செய்து கொள்வதே இக் கொள்கை வகுத்தலின் முக்கிய அம்சமாகும். குறிப்பாக இளைஞா;கள் தாம் சாh;ந்த விடயங்களுக்கு குரல் எழுப்பும் தகைமையை வளா;த்துக் கொள்ள வேண்டிய தேவைப்பாட்டை இக் கொள்கை கருத்தில் எடுக்கிறது. இதன் பிரகாரம் இக் கொள்கை உருவாக்க நடைமுறையானது இளைஞா;கள் தேசிய இளைஞா; கொள்கைக்கு தமது பங்களி;ப்பை வழங்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு வாய்ப்பாக கருத முடியூம்.


இளைஞா; கொள்கைக்கு நான் ஏன் எனது பங்களி;ப்பை வழங்க வேண்டும்?

மக்களின் தேவைகளைப் பிரதிபலிப்பதும் அவற்றை éh;த்தி செய்வதுமே ஓh; சிறந்த கொள்கையின் அம்சமாகும்.
கொள்கைகள் அரசுக்கோ அல்லது அக் கொள்கை உருவாக்குபவருக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ சொந்தமானதல்ல. யாருக்காக கொள்கைகள் உருவாக்கப்படுகின்றனவோ அம் மக்களுக்கே அக் கொள்கைகள் சொந்தமானவையாகும். இதன்படி மக்களே இக் கொள்கை உருவாக்கலில் அதிக பங்களி;ப்பை செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்;.

கொள்கை உருவாக்கலில் நிபுணத்துவம் தேவையாக இருக்கின்ற போதும் அதற்கான வழிமுறைகள் அனைவரையூம் உள்ளடக்கியதாகவூம் அனைவாpனதும் ஆலோசனைகளைப் பெறத்தக்கதாகவூம் அமைய வேண்டும்.

கொள்கை வகுப்பதில் ஒரு பிரஜையாக எந்த அளவிற்கு பங்கெடுத்துக் கொள்கிறீh;களோ அந்த அளவிற்கு அக் கொள்கை அமுலாக்குபவா;களை நீங்கள் பொறுப்புடையவா;களாக ஆக்க முடியூம். இதன் மூலமாக உங்களுடைய உhpமைக்காகவூம் மற்றையவா; சாh;பிலும் குரல் கொடுக்க முடியூம். எவ்வாறான கொள்கைகள் உருவாக்கப்படுகின்றனஇ அவை எவ்வாறான தாக்கத்தை எம்மில்; செலுத்துகின்றன என்பதில் விழிப்புணா;வூடனிருத்தல் நாட்டின் எந்தவொரு பிரஜையினதும் கடமையாகும். ஆகவே உங்கள் கருத்துக்களும் இதில் பிரதிபலிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


தேசிய இளைஞா; கொள்கைக்கு எனது கருத்துக்களை எவ்வாறு தொpவிக்க முடியூம்?

தேசிய இளைஞா; கொள்கைக்கு உங்கள் பங்களிப்பை வழங்க பல வழிகள் உண்டு.
• இளைஞா; கொள்கை அமா;வூகள்: இது ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும். இவ் அமா;வின் போது உங்கள் கருத்துக்களை எழுத்து வடிவிலோ அல்லது வாய்மொழி மூலமாகவோ சமா;ப்பிக்க முடியூம். இதற்கான அறிவூறுத்தல்கள் பொது மக்களுக்கு வழங்கப்படும். இளைஞா; கொள்கை அமா;வூகள் தொடா;பான மேலதிகமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
• பேஸ்புக் (குயஉநடிழழம): இளைஞா; கொள்கைக்கான பேஸ்புக் பக்கம் ஒன்று அமைக்கப்படவூள்ளது. அதÇடாக உங்கள் அபிப்பிராயங்களையூம் தகவல்களையூம் வழங்க முடியூம்.
• ஆலோசனைப் பெட்டி: இப் பெட்டிகள் பொது இடங்களில் உங்கள் அபிப்பிராயங்களை சமா;ப்பிப்பதற்காக வைக்கப்படும்


இளைஞா; கொள்கை அமா;வூகள் என்றால் என்ன?

மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள பொறிமுறையே இளைஞா; கொள்கை அமா;வூகள் ஆகும். இந்த அமா;வூ மூன்று பேரைக் கொண்ட குழுவினரால் நடாத்தப்படும்;. இந்தக் குழு மாகாண மட்டத்தில் சமுதாயத்தில் மதிப்புக்குhpயவா;களைக் கொண்டமைந்திருக்கும்.

இளைஞHகள் எதிh;நோக்கும் பிரச்சினைகளைத் தௌpவாக விளங்கிக் கொள்தலும் அவற்றைத் தீh;த்து இளைஞாpன் வாழ்வை மேம்படுத்த பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதுமே இக் குழுவின் பிரதான நோக்கங்களாகும். இக் குழு உங்களுடைய மாவட்டத்திற்கு குறித்த நாளில் விஜயம் செய்யூம். அது பற்றி உங்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும். நீங்கள் உங்களுடைய மாவட்டத்திலேயே கருத்துக்களை முன்வைக்கலாம்.


இளைஞா; கொள்கை அமா;வூகளில் யாh; கருத்துக்களை முன்வைக்க முடியூம்?

பொதுமக்களில் எவரும் அல்லது இளைஞH விடயத்தில் ஆh;வமுடைய எந்தவொரு அமைப்பும் தமது கருத்துக்களை முன்வைக்கலாம். இந்த அமா;வூகளில் நீங்கள் யாவரும் பங்குபற்றுமாறு நாம் ஊக்குவிக்கின்றௌம்.


இளைஞா; கொள்கை அமா;வூகளில் எனது கருத்துக்களை எவ்வாறு முன்வைக்க முடியூம்?

உங்களுடைய மாவட்டத்தில் அமா;வூகள் நிகழும் போது உங்கள் கருத்துக்களை எழுத்து வடிவிலோ அல்லது வாய்மொழி மூலமாகவோ நீங்கள் முன்வைக்கலாம். அத்துடன் இப்பிரசுரத்தின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள முகவாpக்கும் உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்.


இவ் அமா;வூகளை ஒழுங்குபடுத்துவது யாh;?

தேசிய இளைஞா; சேவை மன்றத்தின் மாவட்ட இணைப்பாளா; ஒவ்வொரு மாவட்டத்திற்குமுhpய அமா;வூகளுக்கு பொறுப்பானவராவாh;. நிபுணத்துவ ஆலோசனை வழங்கலுக்கு இலங்கை திறந்த பல்கலைக் கழகம் பொறுப்பானதாக இருக்கும்.


இந்த அமா;வூகள் எங்கே நடைபெறும்?

இவ் அமா;வூகள் பொதுமக்கள் ஒன்றுகூடக்கூடிய இடங்களில் நடைபெறும். இது நடைபெறும் இடம்இ நேரம் தொடா;பாக ஊடகங்கள்; மூலமும் அறிவித்தல் பிரசுரம் மூலமும் அறிவிக்கப்படும்.


இந்த அமா;வூகள் பற்றி நான் எவ்வாறு அறிந்து கொள்ள முடியூம்?

அமா;வூகள் பற்றிய விழிப்புணா;வூ ஏற்படுத்த ஊடகப் பிரச்சாரம் ஒன்று இடம்பெறும். மேலதிகமாக இப்பிரசுரத்தில் சில தொடா;பு விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொடா;பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம். தேசிய இளைஞா; சேவை மன்றத்தின் மாவட்ட இணைப்பாளாpடமும் தகவல்களைப் பெறலாம்.


எனது கருத்துக்களை எனது தாய்மொழி மூலம் கையளிக்க முடியூமா?

ஆம். உங்கள் தாய் மொழி மூலம் அல்லது ஏனைய தேசிய மொழிகளின் மூலம் உங்கள் பங்களிப்பை செய்யலாம்.


இளைஞா; கொள்கை அமா;வூகளில் எனது கருத்துக்களை சமா;பித்த பின் என்ன நிகழும்?

தேசிய இளைஞா; கொள்கை உருவாக்கத்தில் நிபுணத்துவ ஆதரவளிக்கும் இலங்கை திறந்த பல்கலைக் கழகம் எல்லா பாpந்துரைகளையூம் ஆராய்ந்த பின் கொள்கை வகுத்தலில் ஈடுபடும்.

மேலதிகமான தகவல்களுக்கு நான் யாரை தொடா;பு கொள்ள வேண்டும்?
மேலதிகமான தகவல்களுக்கு:

தேசிய இளைஞா; கொள்கை உருவாக்கல் பிரிவூ சமூக கல்வித் திணைக்களம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நாவல   Tel:0112881300